search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்ணாரப்பேட்டை டிஎம்எஸ்"

    மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம். #MetroTrain
    சென்னை:

    வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி.- டி.எம்.எஸ். இடையே புதிய பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- விமான நிலையம்வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்- பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவை முழுமை அடைந்துள்ளது.

    இந்த 2 வழித்தடத்திலும் நேற்று இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    ஆனால் சைதாப்பேட்டை- சின்னமலை இடையே உயர் அழுத்த மின் கம்பியில் பழுது ஏற்பட்டதால் டி.எம்.எஸ்.- சின்னமலை இடையே சேவை தடைப்பட்டது. இதனால் இலவச பயணம் செய்ய ஆர்வமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    6 மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. மெட்ரோ ரெயிலில் முழுமையாக பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து குடும்பத்துடன் வந்தவர்கள் ஒரு பகுதி சேவை முடங்கியதால் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

    இதனால் பொதுமக்கள் வசதிக்காக இன்று மேலும் ஒரு நாள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம்.

    ஆனாலும் நேற்று மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். புதிய சேவையை ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் இலவச பயண திட்டத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. பொது மக்கள் மெட்ரோ ரெயிலை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில் பயணத்திற்கு இணைப்பு வசதியை அளித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது 55 ஆயிரம் பேர் தினமும் பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த மெட்ரோ நிர்வாகம் அடுத்த கட்ட முயற்சிகளை கையாண்டு வருகிறது. #MetroTrain
    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் வரை 23 கி.மீ தூரத்திற்கும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்திற்கும் 2 வழித்தடங்களில் நிறைவேற்றப்படுகிறது.

    உயர்மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரையிலும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.சில் இருந்து விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே சுரங்கப்பாதையிலும் ரெயில்களை இயக்குவதற்காக கடந்த சில மாதங்களாக பணிகள் மும்முரமாக நடந்து முடிந்துள்ளன. இதன்மூலம் 45 கி.மீ தூரத்திற்கான முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்தன.

    அதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவையை வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதலில் வருகிற 30-ந்தேதி போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் வசதிக்கேற்ப தொடக்கவிழா தள்ளி வைக்கப்பட்டது. அனேகமாக பிப்ரவரி 6 அல்லது 10-ந்தேதி வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்க பரிசீலிக்கப்பட்டுள்ளது.

    அதற்கான விழா சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. மத்திய வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி ஹர்தீப்சிங்பூரி, முதல்-மந்திரி எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் அவர் தற்போது இதில் பங்கேற்க மாட்டார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே 10 கி.மீ தூரத்துக்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் தலைமையிலான அதிகாரிகள் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் பார்த்தனர். அப்போது ரெயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    நாளை மறுநாள் (25-ந்தேதி) மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் திருப்தி ஏற்பட்டால் இறுதி முடிவு எடுக்கப்பட்டு சில நாட்களில் ரெயிலை இயக்க அனுமதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த மார்க்கத்தில் ரெயில்சேவை தொடங்கும் பட்சத்தில் முதல்கட்ட பணி நிறைவேறி 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ சேவை முழுமை அடையும். #MetroTrain
    ×